மற்றும்மொரு தமிழ் நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!
Budget
Kinniya
Failed
S.H.M.Naleem
By MKkamshan
திருகோணமலை, கிண்ணியா நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று தோல்வியடைந்துள்ளது.
தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்(S.H.M.Naleem) தலைமையில் இன்று மாலை வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு இடம் பெற்றதையடுத்து எதிராக 07 வாக்குகளும் ஆதரவாக 05 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இச் சபையில் மொத்தமாக தவிசாளர் உட்பட 13 உறுப்பினர்கள் அங்கம் வகித்து வரும் நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் உறுப்பினர் நாஸிக் மஜீத் சபை அமர்வுக்கு இன்றைய தினம் சமூகமளிக்கவில்லை .


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்