இலங்கைக்கு பிரித்தானியா அளித்த உத்தரவாதம்
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றுவ் பெற்றிக் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா நீதி, சிறைச்சாலை நடவடிக்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவுடன் நேற்று(19) இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா நீதி, சிறைச்சாலை நடவடிக்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றுவ் பெற்றிக்குக்கு விளக்கியுள்ளார்.
மறுசீரமைப்பு பொருளாதார இலக்கு
அத்துடன், இந்த மறுசீரமைப்பு பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதில் தாக்கம் செலுத்தும் முறை தொடர்பாகவும் இரு தரப்பினருக்கிடையிலான சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையின் பங்குபற்றலுடன் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக சட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பரந்தளவில் கவனம் செலுத்தியிருப்பதாக விஜேயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதன் காரணமாக சில சட்டங்களை செயல் வலுப்பெறச் செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதையும் இதன் போது எடுத்துரைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |