யாழில் தபால் பெட்டி சின்னத்தில் களமிறங்கும் அங்கஜன் இராமநாதன்
புதிய இணைப்பு
கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதன் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் களமிறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள காரணத்தினால் அந்த கட்சியின் பெயரையே அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாகவே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கை பெற்றிருந்தார்.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றையதினம் (11.10.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளார்.
அங்கஜன் இராமநாதன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் (SLFP) போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தார்.
வேட்புமனு தாக்கல்
இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் நேற்றைய தினம் (10) வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |