அண்ணாமலையின் அடுக்கட்ட நகர்வு - வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அண்ணாமலை (Annamalai) பதவி விலகல் செய்ததை கட்சித் தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்திலும் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளம் வழியாக நேரலை
இதன்மூலம் அண்ணாமலை பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார். இனி அவருக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பு இருக்காது.

இதற்கிடையே இன்று மதியம் 12 மணிக்கு அண்ணாமலை தனது சமூக வலைதளம் வழியாக நேரலையில் உரையாற்றி வருகிறார்.
இந்த சமயத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி அல்லது புதிய இயக்கம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் அண்ணாமலையின் பதவி விலகல் ஏற்கப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் இன்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அவர் புதிய இயக்கத்தை தொடங்குகிறாரா? அல்லது புதிய கட்சியை தொடங்குகிறாரா? என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |