நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக மே மற்றும் ஜூன் மாத ஆரம்பத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை காவல் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பேரவையின் தற்காலிகத் தரவுகளின்படி இவை கணக்கிடப்பட்டுள்ளன.
அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்த கடுமையான பருவமழை, வழுக்கும் வீதிகள் மற்றும் மோசமான காலநிலை காரணமாக முந்தைய மாதங்களை விட இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பலதரப்பட்ட நடவடிக்கை
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகளும் பாதசாரிகளுமே எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சீரற்ற காலநிலைகளின் போது சாரதிகள் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க தரப்பிலும் விபத்துகளைக் கட்டுப்படுத்த பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |