கபில சந்திரசேனவின் மரண விசாரணை அடுத்த வாரம் வரை ஒத்திவைப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை இன்று (05) கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மறைந்த கபில சந்திரசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் முன்னிலையாகி இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
சாட்சி விசாரணை
அதனைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் குமாரசிறி பண்டாரவின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பான மேலும் சில சாட்சிகளான 25 மற்றும் 26ஆம் இலக்க சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பது இம்மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |