தேசிய பாடசாலைகள் : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Schools
By Jaso
நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் 46 இல் அதிபர் வெற்றிடம் நிலவுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை கல்வியமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன்படி 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
விண்ணப்பிக்க தகுதியானோர்
2025 மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி இவ்வருட டிசம்பர் 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி