அழகியல் கற்கை நெறி : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு !
Ministry of Education
G.C.E.(A/L) Examination
Sri Lankan Schools
Education
By Aadhithya
உயர்கல்வியில் அழகியல் பாட செயற்பாடுகள் அப்படியே தொடர்வதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான அறிக்கைகளை இல்லாதொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அழகியல் கற்கைகள் குறித்து வெளியாகும் வதந்திகள் தொடர்பாக கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்ட அறிவிப்பிபில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, அழகியல் பாடங்கள் பொதுக் கல்வியின் இன்றியமையாத பகுதியாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அழகியல் பாடங்கள்
அந்தவகையில், இளங்கலை, இடைநிலைக் கல்வி, முதுநிலை இடைநிலைக் கல்வி மற்றும் க.பொ.த. சாதாரண தரம் (G.C.E O/ Level) மற்றும் உயர்தரத்திலும் (G.C.E A/ Level) அழகியல் பாடங்களை மேற்கொண்டு படிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்