கொரோனா நோயாளிகளுக்கு வெளியான அறிவிப்பு
doctor
corona patient
call
By Sumithiran
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மருத்துவரை தொடர்பு கொண்டதன் பின்னர், நோயாளியின் நோய் நிலைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.