அரிசி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நுகர்வோர் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் கொள்வனவு செய்ய முடியும் என (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி இலங்கை முழுவதிலும் உள்ள CWE விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் ஒரு கிலோ 99 ரூபாய்க்கு 5 கிலோ அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
“மற்ற அரிசி வகைகளிலும் அரசாங்கம் தலையிடுகிறது. அதன்படி, எதிர்காலத்தில் பெறப்பட்ட தொகை ஏனைய விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும். அரிசியின் சந்தை விலையில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தனியார் துறை வர்த்தகர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு நிதி அமைச்சர் நேற்று தீர்மானம் எடுத்துள்ளார். இதனால், எதிர்காலத்தில் அரிசியின் சந்தை விலை 100 ரூபாவிற்கும் குறையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.