பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் குறித்து விசேட அறிவிப்பு
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேட்டைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் டிஜிட்டல் வடிவத்தினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியூடாகப் ஒன்லைனில் கொள்வனவு செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி
இந்தக் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த ஏப்ரல் 28-ஆம் திகதி முதல் ஆரம்பமாகின.

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக மொத்தம் 1,76,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், தகுதி பெற்றுள்ள மாணவர்கள் மே 19-ஆம் திகதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |