சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூஜித் ஹேமசிறி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Easter Attack Sri Lanka Department of Prisons Sri Lanka Pujith Jayasundara Hemasiri Fernando
By Jaso Aug 03, 2026 11:26 AM GMT
Report

 முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலையில் எந்த விசேட வசதிகளும் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான அநுருத்த கஜநாயக்க தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, கடமைகளைத் தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட இந்த முன்னாள் உயர் அதிகாரிகள் இருவரும் முதலில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட விசேட சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘ஜம்பர்’ சிறை உடை

தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு வழங்கப்படும் ‘ஜம்பர்’ சிறை உடை இவர்கள் இருவருக்கும் அணிவிக்கப்பட்டுள்ளதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிறைச்சாலை வேலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூஜித் ஹேமசிறி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Imprisoned Pujith Hemasiri

சிறைச்சாலை வட்டாரங்களின்படி, இவர்கள் இருவருக்கும் வெளியிலிருந்து உணவு பெற அனுமதி இல்லை. தற்போதுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறை குடும்ப உறுப்பினர்கள் இவர்களைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு சந்திக்கும் சந்தர்ப்பங்களில் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை வழங்க முடியாது.

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித

சோப்பு மற்றும் பற்பசை மட்டுமே வழங்க முடியும்

சோப்பு மற்றும் பற்பசை போன்ற சுகாதாரப் பொருட்களை மட்டுமே குடும்ப உறுப்பினர்களால் வழங்க முடியும். மேலும், இந்த சந்திப்புகளுக்காக குடும்ப உறுப்பினர் ஒருவர் சிறைச்சாலை விதிகளின்படி முன் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூஜித் ஹேமசிறி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding Imprisoned Pujith Hemasiri

 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விசேட தேசிய மற்றும் மத பண்டிகைக் காலங்களில் மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியுடன், பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான பரிசோதனைகளுக்கு உட்பட்டு வெளியிலிருந்து இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுகளைக் கொண்டுவர வாய்ப்பு வழங்கப்படும்.

வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016