கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய காவல் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார்.
பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
பெண்ணின் உடைமைகள்
வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலைய காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார்.
ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவியை கண்டுபிடிப்பதில் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |