நகுலேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
Jaffna
Hinduism
By Theepan
பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
நகுலாம்பிகாதேவி சமேதராக வீற்றிருக்கும் நகுலேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் மகோற்சவம் பல்வேறு பூஜை வழிவாடுகளுடன் ஆரம்பமானது.
இன்று காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை.10 .00 மணிக்கு வருடாந்த மகோற்சவம் கொடியேற்றம் இடம்பெற்றது.
இன்று ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 15ம் திகதி காலை தேர்த்திருவிழாவும் இரவு சிவராத்திரியும் இடம்பெற்று மறுநாள் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி