அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுங்கள் : களுதாவளை மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை
சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
களுதாவளை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (27) களுதாவளை பிரதான வீதியில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதன்போது அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி அவரின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
அனோஜன் எங்களது பிள்ளையைப் போன்றவர்தான், தெரியாமல் சமூக வலைத்தளத்தில் தவறிழைத்துவிட்டார், அவரால் அவரது குடும்பம் மாத்திரமின்றி நாங்களும், மிகவும் கவலையிலுள்ளோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு சவுதி மன்னரிடம் மிகவும் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என இதன்போது கலந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் களுதாவளையிலுள்ள ஆலயங்களின் பிரதிநிதிகள், சங்கங்கள், மன்றங்களின் உறுப்பினர்கள், களுதாவளை பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |