எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்: அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Saudi Arabia
By Farook Sihan Sep 18, 2026 12:45 PM GMT
Report

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ் வழக்கு தொடர்பில் ஆரம்பத்தில் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன் சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் : நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் : நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கை

இத் தீர்ப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அனோஜனின் தாயார், "எனது மகன் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்: அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை | Anojan S Mother Makes A Tearful Plea President

எனினும் எனது தங்க மகனை மன்னித்து, உயிருடன் மீட்டுத் தாருங்கள்" எனக் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞர் அனோஜனைக் காப்பாற்றுவதற்காகச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் அவசரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சவூதி அரசிடம் கருணை மனுக்கோருவது தொடர்பிலும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

காணாமல் போன 96 வயது மூதாட்டியின் உடல், 17 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு

கொழும்பு துறைமுகம் அருகே கடலில் விழுந்த கடல்சார் வழிகாட்டி பாதுகாப்பாக மீட்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்