இஸ்ரேலுக்கு செல்லவுள்ள நாற்பதாயிரம் இலங்கையர்
இலங்கை அணிசேரா நாடு என்பதால் ஏனைய நாடுகளின் அரசியல் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த முடியாது எனவும், நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார(manusha nanayakkara) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
40,000க்கும் மேற்பட்டோரை அதிக ஊதியத்துடன்
"வேலைகளை அகற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இஸ்ரேலில் 40,000க்கும் மேற்பட்டோரை அதிக ஊதியத்துடன் வேலைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
அது நடந்தால் எங்கள் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் வெற்றிகரமான தொழிலதிபர்களாக வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்" என்று அமைச்சர் கூறினார்.
இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்தை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சில அரசியல் குழுக்கள் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |