இலங்கையில் அதிகளவு மீன்களை உண்ணும் மீன் உயிரிழந்தது
இலங்கையில் (srilanka) அதிகளவு மீன்களை உண்ணும் மீனாக கருதப்படும் ஹரபிமா மீன் உயிரிழந்துள்ளது.
சமீபத்தில், இந்த அற்புதமான மீன் சமூக ஊடகங்களில் பிரபலமானது. இந்த மீன் எட்டடி நீளமும், மூன்றடி சுற்றளவும் கொண்டது.
13 வயதாகும் இந்த மீன் இனத்தின் உணவு சிறிய மீன்கள் என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
உணவுக்காக தினசரி கிலோ கணக்கில் சிறிய கடல் மீன்கள்
பல்மடுல்ல - ரில்ஹேனைச் சேர்ந்த சுரங்க விஜயரத்னவின் தனியார் மீன் வளத்தில் வளர்க்கப்பட்ட இந்த மீன், அதன் உணவுக்காக தினசரி கிலோ கணக்கில் சிறிய கடல் மீன்கள் வாங்கப்பட்டன.
ஹரபிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த மீன், அதற்கென தனியாக கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான தொட்டியின் நீர் வெளியேறும் நிலையத்தில் இருந்து திடீரென நீர் வெளியேறியதால் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சுரங்கா விஜேரத்ன,செல்லப்பிராணிகள் மற்றும் சிறப்பு மீன்களை ஒரு பொழுதுபோக்காக வளர்த்து வருவதுடன் இந்த நடவடிக்கைகளின் பராமரிப்புக்காக மாதாந்தம் பெருமளவு பணத்தை செலவிடுகிறார்.
பள்ளி மாணவர்களும், மற்றவர்களும் இவரது இடத்தை காண வருகின்றனர். மேலும் மீன் எரிவதைப் பார்க்க ஏராளமான மக்கள் வந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |