பச்சிளம் குழந்தைகளுடன் காட்டுக்குள் வாழும் குடும்பம்: தாயின் உருக்கமான கோரிக்கை
அநுராதபுரம்(anuradhapura) ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நான்கு குழந்தைகளுடன் தாய், தந்தை என அறுவர் இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி காட்டுக்குள் மரம் ஒன்றில் குடிசை கட்டி வாழ்ந்து வரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு சிறிய பெண் குழந்தையும் உள்ள இந்த தம்பதிக்கு மூன்று இரட்டை மகன்கள் அண்மையில் பிறந்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக தாங்கிக் கொள்வதற்கு வசதி படைத்தவர்கள் அல்ல.
மழைக்கு கூட இந்த குடிசையில் இருக்க முடியாது. இந்த சிறிய வீட்டில் குடிநீர் வசதியோ, மின்சார வசதியோ இல்லை.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட சிறிய வீடு
இந்த சிறிய வீடு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி இரவில் மரத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்த குழந்தைகளின் தந்தை மரத்திலிருந்து விழுந்து தற்போது ஊனமுற்றுள்ளார்.
பெற்றோரின் கவலை
ஆனால், குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை செய்து தருவதற்கு எவ்வித வசதியும் இல்லை என குழந்தைகளின் பெற்றோர் கூறுகின்றனர்.
தனது நான்கு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வீடு கட்ட யாரிடமாவது உதவி கேட்கிறார் குழந்தைகளின் தாய். இந்த குடும்பங்களின் விபரம் அறிய - 077 341 6157
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |