கனடா, இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொதிகள்
கனடா(canada), இங்கிலாந்து(england) மற்றும் நெதர்லாந்து(netherlands) ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட ஆபத்தான போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் இலங்கை(sri lanka) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெஹிவளை, வெள்ளவத்தை, வெயாங்கொடை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
பொதிகளில் ஏராளமான போதைப்பொருட்கள்
எனினும், இந்த முகவரிகள் போலியானவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டிருந்த பொதிகளில் ஏராளமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 150 போதை மாத்திரைகள், 466 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கொக்கெய்ன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி
இந்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 9 மில்லியன் ரூபா என சுங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கப் பிரிவினரின் விசாரணையின் முடிவில் போதைப்பொருள் அடங்கிய பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |