இலங்கை சிறுவர்கள் தொடர்பில் அமெரிக்காவின் முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை சிறுவர்களின் அநாகரீகமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளதாக அமெரிக்காவின் (America) காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் (NCMEC) இலங்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், கொழும்பு பதில் நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் இன்று (15) அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க மையம் செய்த முறைப்பாட்டில், புகைப்படங்களில் உள்ள சிறுவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலதிக அறிக்கைகள்
அத்தோடு, சம்பந்தப்பட்ட அமெரிக்க மையம், உலகின் 181 நாடுகளில் உள்ள சிறுவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முறைப்பாட்டின் உண்மைகளை பரிசீலித்த நீதவான், விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |