தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட மற்றுமொரு படகு : சிக்கிய பெருமளவு போதைப்பொருள்
புதிய இணைப்பு
இலங்கை கடற்படையால் தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தொகையை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மீன்பிடி படகு இன்று (17) காலை சுற்றிவளைக்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விளைவாக போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்படுள்ளது.
அத்துடன் அந்த மீன்பிடி படகில் இருந்த ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் தங்காலை ரெக்காவ கடற்கரையில் அண்மையில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் சுமார் 840 கிலோகிராம் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தெஹிபலே என்ற குற்றவாளிக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
