அரச பேருந்தை மோதித் தள்ளிய கனரக வாகனம்: அறுவர் வைத்தியசாலைக்கு.!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Dilakshan
வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதி பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து தனமல்வில பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பாக கனரக வாகனத்தின் சாரதியை தனமல்வில தலைமையக காவல்நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்து குறித்து தனமல்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி