மீண்டும் கார் பந்தய விபத்தில் சிக்கினார் நடிகர் அஜித்
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய போதிலும் அதிலிருந்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் குமார் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். போர்த்துகல்(portugal) நாட்டில் நடந்த பந்தயத்தில் அஜித்தின் (ajith kumar)கார் விபத்தில் சிக்கியது. அதன்பின்னர் டுபாயில்(dubai) நடந்த போட்டியில் பங்கேற்ற அஜித்தின் கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்
இந்த நிலையில், மீண்டும் இப்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறார் நடிகர் அஜித். ஸ்பெயின்(spain) நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் ஓட்டிய கார் மீண்டும் விபத்துக்குள்ளானது.
மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதால் விபத்து
பந்தயத்தில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை,பாகிஸ்தான் சாதனைகள் தகர்ப்பு : சம்பியன்ஸ் கிண்ண தொடரில் புதிய வரலாறு படைத்தது அவுஸ்திரேலிய அணி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்