அர்ஜூன அலோசியஸ் மீது மற்றுமொரு வழக்கு தாக்கல்
நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் ( Arjuna Aloysius) இற்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான காகிதத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நெப்டியூன் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
வழக்கில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் சமிந்த சஹான் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மில்லியன் ரூபா மோசடி
செய்தித்தாள் அச்சிடுவதற்கான காகிதங்களை வாங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறி, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளின் வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாதபோதும், 2019 ஆம் ஆண்டில் தனித்தனி சந்தர்ப்பங்களில் நான்கு காசோலைகளை வழங்கியதன் மூலம் 12 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குனுவல முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது, அர்ஜுன அலோசியஸ் சிறைச்சாலை நிர்வாகத்தினால், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இந்தநிலையில் இரண்டு தரப்பினரும் முன்வைத்த வாதப்பிரதிவாதங்களை பரிசீலித்த நீதவான், பிரதிவாதிக்கு 8 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையை வழங்கினார்.
அத்துடன், நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இரண்டாவது பிரதிவாதியை மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.