இலங்கை மக்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை - அடுத்தவாரமளவில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு நோய்
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றால் நாளாந்தம் பலர் கண்டுபிடிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் அடுத்த வாரமளவில் மற்றுமொரு நோயான டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்திய அருண ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டின் பல இடங்களில் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் அடுத்தவாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
குறிப்பாக கொழும்பு மாவட்டம், அதிக அச்சுறுத்தல்மிக்க பகுதியாக காணப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் அபாயம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.