மற்றுமொரு வெளிநாட்டு கப்பலை கைப்பற்றிய சிறிலங்கா கடற்படை
arrested
srilanka navy
foregin boart
By Sumithiran
பெருமளவு போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வெளிநாட்டு மீன்பிடி கப்பல் 9 சந்தேக நபர்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படை செய்தித் தொடர்பாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் பல நாட்கள் சிறிலங்கா கடற்படையால் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது வெளிநாட்டு மீன்பிடி கப்பல் மற்றும் ஒன்பது வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை காவல்துறை அளித்த தகவலை தொடர்ந்து, சிறிலங்கா கடற்படை சர்வதேச கடற்பரப்பில் சிறப்பு நடவடிக்கை எடுத்து வெளிநாட்டு மீன்பிடி கப்பல் மற்றும் ஒன்பது வெளிநாட்டு சந்தேக நபர்களை கைது செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.