கோட்டாபயவிற்கு கிடைத்த தொடர் தோல்வி! சர்வகட்சி மாநாட்டு அழைப்பை நிராகரித்த மற்றுமொரு கட்சி
சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.
அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியை திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இந்நிலையில் குறித்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்கியின் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியன புறக்கணித்துள்ளன.
இதே வேளை அரச பங்காளிகளான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் புறக்கப்பணிப்பதாக முன்னரே அறித்துள்ளனர்.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
