தொடரும் உயிரிழப்புக்கள் - இலங்கையில் நிலவும் அதிக வெப்பத்தின் விளைவு!
அண்மைய நாட்களில் நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்தை சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே அதிக வெப்பநிலையை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்ப அதிர்ச்சியினால் இதுவரை மூன்று இறப்புகள் வெவ்வேறு இடங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலைமை
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையை முகங்கொடுக்கும் வகையில், வெப்ப ஆற்றலைக் குறைக்கும் வகையில் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கடுமையான வேலைகளில் ஈடுபடுவது உடலுக்கு நல்லதல்ல எனவும், மே மாதம் 20ஆம் திகதிக்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு இந்நிலை முற்றிலும் மாறுபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
