மீண்டும் சீனாவிடம் உதவிக் கோரிக்கை -கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்குரிய பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை வழங்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீருடைத் துணி

சீனாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாடப்புத்தகங்கள்

2024 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடப்பு வருடத்திற்குரிய மாணவர்களுக்கான சீருடை துணிகளையும் சீனாவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.