அநுர அரசாங்கத்திற்கு பேரிடி: பதிவானது மற்றுமொரு பதவி விலகல்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) போக்குவரத்து குழுவின் தலைவராகவும் பணியாற்றும் பந்துர திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர பிமல் ரத்நாயக்க தலைமையிலான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தவிசாளர் பதவியிலிருந்து விலகிய செய்த மூன்றாவது அதிகாரி பந்துர திலீப விதாரண ஆவார்.
பதவி விலகலுக்கான காரணம்
ஏற்கனவே, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தவிசாளராக பணியாற்றிய ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தவிசாளராக பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியிருந்தனர்.
இந்த நிலையில், பதவி விலகல் குறித்த காரணத்தை விசாரிக்க பந்துர திலீப விதாரணவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் வேறு வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
