அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு -மேலுமொருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நேற்றையதினம் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள துப்பாக்கி விற்பனை நிலையத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று மிசவுரி மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் லெஜியன் கிளப்பில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கேப் கிரார்டியுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவானது. பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.