நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தம்
srilanka
strike
Cantaṉa cūriyārācci
By Jaso
எதிர்வரும் 8ஆம் திகதி ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளன.
இந்த பணிபகிஷ்கரிப்பு சுகவீன விடுமுறை என்ற போர்வையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
பல தொழில்சார் பிரச்சினைகள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி(Cantaṉa cūriyārācci) தெரிவித்தார்.