மற்றுமொரு மாணவனை காணவில்லை : பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அரபுக்கல்லூரியில் இருந்து வீடு செல்வதாக தெரிவித்து சென்ற மாணவன் காணாமற்போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குருநாகல், கல்கமுவ தம்புத்தேகமவை சேர்ந்த முஹம்மத் அனூஸ் என்ற பதினாறு வயது மாணவனே காணாமற் போயுள்ளார்.
வீடு செல்வதாக தெரிவித்து
கண்டி, தஸ்கர பிரதேசத்தில் இயங்கி வரும் அரபு கல்லூரியான அல்-ஹக்கானியாவில் இருந்து கடந்த ஒன்பதாம் திகதி மாலை 4.04 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து இவர் வெளியேறியதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வெவளியேறிச் சென்ற மாணவன் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையில் முறைப்பாடு
கடைசியாக கெலிஓயா பகுதியில் மாலை 05.15 மணியளவில் சிசிடிவி கமராவில் குறித்த மாணவன் அங்கிருப்பது பதிவாகியுள்ளது.இதனையடுத்து நேற்று(11) வாரியபொல காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை கண்டுபிடிக்க காவல்துறையினர் மற்றும் ஊர் மக்கள் தேடுதலினை ஆரம்பித்துள்ளனர். மாணவனை அடையாளம் கண்டால் தந்தை முஹம்மத் நிஸ்தார் 0774917915 அல்லது 0774956581 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
