ரணிலுக்கு வலுக்கும் நெருக்கடி - மற்றுமொருவரும் பதவியை தூக்கி எறிந்தார்
Ranil Wickremesinghe
Arjuna Ranatunga
United National Party
By Vasanth
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டகட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பதவியை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார். எதிர்காலத்திற்கான சரியான வேலைத்திட்டத்தை முன்மொழிவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் தயாரிக்க முடியாமற் போயிருப்பதாக அவர் இன்று அனுப்பிவைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நவீன் திஸநாயக்கவும் தனது தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக ரணிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி