மற்றுமொரு அமெரிக்க நாசகாரி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்
Port of Colombo
United States of America
Ship
By Sumithiran
அமெரிக்க(us) கடற்படையின் USS Okane என்ற நாசகாரி கப்பல் இன்று (21 ) ஒரு எரிபொருள் நிரப்பு விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வந்திறங்கிய கப்பலை சிறிலங்கா கடற்படையினர் அன்புடன் வரவேற்றனர்.
154 மீட்டர் நீளம் கொண்ட ஆர்லீ பர்க்-வகுப்பு அழிப்புக் கப்பலான USS Okane,கொமாண்டர் ரிச்சர்ட் ரே தலைமையில் 328 பணியாளர்களைக் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகிறது.
நாளை புறப்படும்
நிரப்புதல்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கப்பல் நாளை (22) நாட்டிலிருந்து புறப்படும்.

முன்னர் வந்த கப்பல்
கடந்த திங்கட்கிழமை, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் (USS Spruance) கப்பல் நிரப்பும் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நிரப்பும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த கப்பல் நேற்று(20) இலங்கையிலிருந்து புறப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |