செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை : கனேடிய அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lankan Tamils S Shritharan Canada chemmani mass graves jaffna
By Independent Writer Oct 25, 2026 04:21 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைத் தலைநகர் ஒட்டாவாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி ஆக்கிரமிப்பு மற்றும் நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கனேடிய அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு: முகத்தை மூடியபடி சென்ற கஸ்ஸப்ப தேரர்

தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு: முகத்தை மூடியபடி சென்ற கஸ்ஸப்ப தேரர்

தடயவியல் விசாரணை

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி, சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை : கனேடிய அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | International Forensic Investigation In Chemmani

மேலும், முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் காணிகளையும், யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் 2,117 ஏக்கர் காணிகளையும் உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தையிட்டி காணிப் பிரச்சினைக்கும் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டிய குழுவினர், நல்லூரில் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்தும் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

ஞானசார தேரரை விடுவிக்க கோரி 10 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

ஞானசார தேரரை விடுவிக்க கோரி 10 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

விடுக்கப்பட்ட கோரிக்கை 

போர் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் சர்வதேச தடயவியல் விசாரணை : கனேடிய அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | International Forensic Investigation In Chemmani

தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாகக் கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்திப்பின் நிறைவில், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் கேப்பாப்பிலவு, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பில் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப், இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

கிரிஷ் நிறுவன இயக்குநரின் சாட்சியம்: நாமலுக்கும் - ஜானகிக்கும் இறுகும் விசாரணை பிடி

கிரிஷ் நிறுவன இயக்குநரின் சாட்சியம்: நாமலுக்கும் - ஜானகிக்கும் இறுகும் விசாரணை பிடி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026