நாட்டை மீண்டும் அபாயத்திற்குள் தள்ளவுள்ள கொரோனா அலை- வைத்திய அதிகாரி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்று கூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய(Ruwan Jeyasooriya) தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் நாடு கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.