கோட்டாபயவுக்கு எதிராக யாழில் களமிறங்கிய மக்கள்: வலுக்கும் போராட்டம்
Jaffna
Sri Lankan protests
Gota Go Gama
By Kiruththikan
அரசுக்கு எதிரான போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இடம் பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழிலும் போராட்டம் இடம் பெற்றுள்ளது.
யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இடம் பெற்றுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், சர்வகட்சி அரசாங்கம் அமைக்க பட வேண்டும் என கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் இடம் பெற்றுள்ளது.
வலுக்கும் போராட்டம்
குறித்த போராட்டத்திற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், செம்முகம் ஆற்றுகைக்குழு, தேசிய கலை இலக்கிய பேரவை, தமிழ்த்தேசிய பண்பாட்டு பேரவை, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம்,குரலற்றவர்களின் குரல், பன்மைத்துவ மக்களாட்சி மன்றம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகிய பொது அமைப்புகள் ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.