மொட்டுக் கட்சியின் ரணிலுக்கான ஆதரவு: புலம்பெயர் தேசத்தில் அநுர கூறிய விடயம்
அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காவிட்டால் அக்கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், ரொறன்ரோவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தல் முன்னதாக இருந்தால் நல்லது என்று பசில் கூறுகிறார், அதிபர் தேர்தலில் அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
ரணிலின் அதிகாரம்
ஒன்று ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரணிலை ஆதரித்தால் மொட்டு முடிந்து விட்டது, இல்லையேல் வேறு யாரயாவது களமிறக்க வேண்டும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு வாக்குகள் பெறமுடியாது.
அதனால்தான் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த முயற்சிக்கிறார்கள், பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வெற்றிபெற ரணிலால் மட்டுமே முடியும். இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நாளை ரணிலின் அதிகாரம் முடிவுக்கு வரும்.
அதிபர் தேர்தல்
தற்போது அரசியல் சூழலுக்கு ஏற்ப அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும், அதை யாராலும் தடுக்க முடியாது.
மக்கள் அவதிப்படுகின்றனர். தேர்தலில் பாடம் புகட்டுங்கள். நாட்டை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுங்கள். மக்களும் ஆட்சியாளரும். ஒரே எதிர்பார்ப்புடன் ஆட்சி அமைப்போம்" என கூறியுள்ளார்.
யாழில் மற்றுமொரு அவசர சிகிச்சை பிரிவு: மன்னாரில் மாத்திரம் ஒழுங்கான அவசர சிகிச்சை பிரிவு இல்லாமை ஏன்..!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |