நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்: பெருமிதத்தில் அரசாங்கம்!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நவம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிறைவேற்றியுள்ளதாக வெரிட் ரிசர்ச் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்துவதை கண்காணிக்க வெரிட் ரிசர்ச் அறிமுகப்படுத்திய ‘அனுர மீட்டர்’ முன்னேற்ற கண்காணிப்பு கருவியின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளால் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
வாக்குறுதிகள்
இந்த கண்காணிப்பு கருவி ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையில் அளித்த 30 முக்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளது.

எனினும், இது தொடர்புடைய அறிக்கையின்படி, நவம்பர் மாதம் வரையில் மீதமுள்ள 10 வாக்குறுதிகளில் 9 வாக்குறுதிகளில் எந்தவித முன்னேற்றமும் காட்டப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதியால் ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என வெரிட் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கண்காணிக்கப்பட்ட 30 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் டித்வா புயல் நாட்டைத் தாக்குவதற்கு முன்பு இந்த முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் வெரிட் ரிசர்ச் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |