தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை : பதவிக்காக அநுரவுடன் நகரும் தமிழ் எம்.பிக்கள்
வடக்கு கிழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக எட்டு பேர் தெரிவு செய்யப்பட்டமை ஒரு அரசியல் விபத்து என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Sugash Kanagaratnam) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (31) யாழில் (Jaffna) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தெரிவு செய்யப்பட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பாவங்களுக்கு பரிகாரம் தேடும் நாள் வந்துவிட்டது.
ஆகவே, இவர் தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதை தவிர்த்து தேசிய மக்கள் சக்தியில் இருந்து விலக வேண்டும்.
பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake), அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என தெரிவித்திருந்த நிலையில் வெட்கம் இன்றி தமிழ் உறுப்பினர்கள் பதவிக்காக அவர் அருகில் ஒட்டிகொண்டு இருக்கின்றனர்” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி தேர்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அரசின் நிலைப்பாடு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சி முறை மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
23 மணி நேரம் முன்