அடுத்த தேர்தலில் பாரிய அடிவாங்கப்போகும் அநுர அரசாங்கம்...!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, ஊழல்வாதிகளின் கைதுகள் தொடர்பில் மக்களுக்கு அராசாங்கம் மீதான பாரிய எதிர்ப்பார்ப்பு வலுப்பெற்றிருந்தது.
இதையடுத்து, அரசாங்கமும் மக்களின் நம்பத்தன்மையை காப்பாற்றும் விதமாக அடுத்தடுதாக தொடர் அரசியல் கைதுகளை மேற்கொண்டு தங்களை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டது.
இருப்பினும், கடந்த கால முக்கிய அரசியல்தலைமைகள் கைது செய்யப்பட்ட போதும், முறையான சாட்சியங்களைச் சேகரிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் நீதித்துறை நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி அரசாங்கம் காலத்தைக் கடத்தியது.
இதனால், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்வதைத் தவிர்த்து, இரண்டாம் நிலை அதிகாரிகளை மட்டும் இலக்கு வைத்து மக்களை திசைதிருப்பி அரசாங்கம் ஒரு அரசியல் நகர்வை மேற்கொள்வதாக விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்துள்ளது.
இவ்வாறான காரணங்களினால் நாட்டில் ஒரு தேர்தல் வந்தால் தற்போதைய அரசாங்கம் இல்லாமல் ஆக்கப்படுவதங்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எமது தலைமுறை கட்சி தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், தொடரும் அரசியல் கைதுகளின் உண்மை தன்மை குறித்தும், தமிழர் பிரதேச அரசியலின் தற்போதைய நிலை குறித்தும் மற்றும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அக்கினி பார்வை நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |