வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு
வடக்கில் மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறப்பது மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள தனியார் காணிகளையும், முறையாக விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
காணிகளை விடுவிக்க நடவடிக்கை
அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது, கேட்டறிந்துள்ளார்.

2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனைய காணிகளையும் முறையாக விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வகையில் காணிகளை விடுவிக்கும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக தற்போதுள்ள காணிகளை முகாமைத்துவம் செய்து கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |