சஜித் உடனான விவாதம்: பகிரங்கமாக சாடிய அனுர
SJB
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
By Laksi
சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்காக மே 20 ஆம் திகதிக்கு முன்னர் திகதியை வழங்குமாறு அனுரகுமார திஸாநாயக்க ,ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற மே தின பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மே தின பேரணியே ஊழல் ஆட்சியாளர்களின் கீழ் தேசிய மக்கள் சக்தி நடத்தும் இறுதி மே தின பேரணி என அவர் சுட்டிக்காட்டினார்.
விவாதத்திற்கான நாள்
மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, “ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்திற்கு அழைத்தனர். அதற்கு 4 நாட்கள் கொடுத்தோம். 4 நாட்களும் அவர்களுக்கு வேலையாம் இரவிலும் வேலை செய்வார்கள் போல.
எனவே மே 20க்கு முன்னர் விவாதத்திற்கான நாளை ஒதுக்குமாறு கோருகிறோம். இந்த காலப்பகுதியில் எந்தவொரு நாளிலும் விவாதத்திற்கு நாங்கள் தயார்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்