கிவுல்ஓயா முதல் மலையகம் வரை அனுர புதிய அதிரடி: அதிகாரசபைகளுக்கு புதிய அதிகாரம்!
கிவுல் ஓயா திட்டம் போன்ற தெற்கின் நகர்வுகளால் தமிழர்களின் இதய பூமியான மணலாறு சிங்களக் குடியேற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில் வடக்கில் சில கொசுறு படைய மீளெடுப்புகள் வருகின்றன.
சுழிபுரத்தில் இருந்த இராணுவ முகாம் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த படையினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் சுழிபுரத்தில் இருந்த படையினரை சங்கானைக்கும் பண்டத்தரிப்பில் இருந்த படையினரை அராலிக்கு மாற்றுவதன் மூலம் தமிழர்தாயக பகுதியில் உள்ள மொத்த படையப் பிரசன்ன நிலையில் மாற்றமேதும் வராது.
மாறாக கருவாடு கரைந்தாலும் அதன் ஆணம் சட்டிக்குள் தான் இருக்கும் என்றவகையில் நிலைமை மாறும் அவ்வளவுதான்.
இதனால் சுழிபுரம் மற்றும் பண்டத்தரிப்பு மினி முகாம்கள் மூடப்பட்டாலும் வடக்கில் குடிமக்களுக்கு 1 படை உறுப்பினர் என்ற விகிதமும் சிறிலங்கா படைத்துறையின் 25 சதவீதம் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலைமையும் மாறாது இந்தப் பின்னணியில் கிவுல் ஓயாத்திட்டம் மற்றும் அதனை நகர்த்தும் மஹாவலி அதிகாரசபையை எதிர்க்கும் தமிழர்களுக்கும் அனுர நேற்று ஒரு மறைமுகசெய்தியை ஒரே கல்லில் 2 மாங்காய்களாக வழங்கிய நிலையில் இந்த விடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |