இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார
புதிய இணைப்பு
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
இது குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து கலந்துரையாடியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
Pleased to meet @anuradisanayake, Leader of NPP and JVP of Sri Lanka this morning.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 5, 2024
A good discussion on our bilateral relationship and the mutual benefits from its further deepening. Also spoke about Sri Lanka’s economic challenges and the path ahead.
India, with its… pic.twitter.com/5cJJwaTB3o
முதலாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்றைய தினம் (05) குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
உத்தியோகபூர்வமான சந்திப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, அந்த கட்சியின் செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனை தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இதன்போது உத்தியோகபூர்வமான சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |