கோபால் பக்லேவை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க : அரசியல் நெருக்கடிகள் குறித்தும் பேச்சு!
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவை சந்தித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அநுரகுமார திஸாநாயக்க தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளர்.
இதன் போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடிகள்
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து கோபால் பக்லேவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மேத்யூ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
I met Indian High Commissioner Mr. Gopal Baglay at the Indian High Commission today (17th) afternoon.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) November 17, 2023
I had the opportunity to discuss lengthily the current political situation in Sri Lanka and the economic crisis our country is confronted with at present.
Mr. Eldos Mathew, the… pic.twitter.com/pk0a5i6Q8s
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |