வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமா மொட்டு கட்சி...!
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படுமென சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எனினும், அதற்கு எதிராக செயல்படுவது தொடர்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம்
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என நம்பப்படுவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமது கட்சியின் உறுப்பினர்கள் இது தொடர்பில் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.
கட்சி தீர்மானம்
இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நாளை அல்லது நாளை மறுதினம் கட்சி கூடும் என பசில ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் போது, வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
