இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்த அனுர குமார திசாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம் பெற்றது.
இச் சந்திப்பு நேற்று (23) பிற்பகல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பில் அனுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
முதற் தடவையாக சந்திப்பு
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கையின் நடப்பு அரசியல் நிலைவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
I met the new Indian High Commissioner to Sri Lanka, Mr. Santosh Jha, at the Indian High Commission this afternoon (23rd).
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) January 23, 2024
It is the first opportunity I got to meet and discuss with Indian High Commissioner Mr Santosh Jha after he commenced his duties in Sri Lanka last December.… pic.twitter.com/ENOTKDaslp
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |